Connect with us
Cinemapettai

Cinemapettai

srireddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு இந்த நிலைமையை கொடுத்த தெலுங்கு திரையுலகிறகு நன்றி : ஸ்ரீ ரெட்டி

வருமானத்திற்கு கூட வழியில்லாத நிலைக்கு என்னை தள்ளி இருக்கும் தெலுங்கு திரையுலகத்தினருக்கு நன்றி என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து இருக்கிறார்.

sri reddy

கோலிவுட் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. சுசி லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட்டே ஆடித்தான் போனது. கோலிவுட்டை தொடர்ந்து தற்போது தெலுங்கு உலகம் சிக்கியது. நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குறித்த அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தன்னை பலவந்தமாக பிரபலங்கள் பலர் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருப்பதாக ஷாக் கொடுத்தார். அவரை தொடர்ந்து, பிரபல நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி தன்னை வலுகட்டாயமாக பாலியல் துன்புறுத்தியதாக தெரிவித்தார். தொடர்ந்து, அவர்களின் குளோஸான புகைப்படங்களும், அந்தரங்க சாட்களும் வெளியிட்டார். ஆனால், டகுபதி குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக காத்தனர். தொடர்ந்து, ஸ்ரீ ரெட்டியை நடிகர் சங்கம் நீக்கியது. இதில் கடுப்பானவர் சங்க வாசலில் அரை நிர்வாணமாக போராட்டத்தில் இறங்கினர். இதுவே ஸ்ரீரெட்டியின் தீவிரத்தை பல மொழி திரையுலகமும் புரிந்து கொள்ள வைத்தது. ரசிகர்களும் ஸ்ரீரெட்டியின் புகார்களை உற்று நோக்க தொடங்கினர். அதன் பிறகும், தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரின் பெயரும் சர்ச்சையில் சிக்கியது. பிரபல நடிகர் ராஜசேகருக்காக அவரது மனைவி ஜீவிதா இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்புவதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தற்போது நானி தன்னுடன் உறவு வைத்து கொண்டதாகவும் ட்வீட் தட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பிரச்சனைக்கு பிறகு ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புகள் தருவதை தெலுங்கு திரையுலகம் நிறுத்தி கொண்டது. கிடைக்க இருந்த பிக்பாஸ் வாய்ப்பையும், நானியுடனான மோதலில் ஸ்ரீரெட்டி இழந்தார். இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் தட்டி இருக்கும் ஸ்ரீரெட்டி, சினிமாவில் எனக்கு வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டனர். இதனால் தின தேவைக்கு கூட வருமானம் இல்லாமல் தவிக்கிறேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு திரையுலகத்தினருக்கு நன்றி எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top