Tamil Nadu | தமிழ் நாடு
தஞ்சை பெரிய கோவில் பிரச்சனை முடிவுக்கு வந்ததா.? உளவுத்துறையினர் விளக்கம்
தமிழ்நாட்டிற்கு அடையாளமாக இருப்பது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலை ராஜராஜ சோழன் கட்டினார்.
தமிழ்நாட்டிற்கு அடையாளமாக இருப்பது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலை ராஜராஜ சோழன் கட்டினார். இந்த கோயிலுக்கு தஞ்சை பெரிய கோயில் என்றும் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
கிபி 11ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார். 1003-1400 ஆண்டு இக்கோயில் கட்டப் தொடங்கி 1010 ஆம் ஆண்டில் தான் இந்த கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோயில் 2010 வது ஆண்டுடன் 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சமீபகாலமாக இந்தக் கோயில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அகற்றப்பட்டு ஹிந்தி எழுத்துக்கள் புகுத்தப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. அதற்கு தற்பொழுது தொல்லியல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். தொல்லியல் துறையினர் அதை ஹிந்தி எழுத்துக்கள் இல்லை என்றும் அவை மராட்டிய கல்வெட்டுக்கள் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் அது தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் எழுத்துக்கள் அகற்றப்பட்டு அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை இல்லை என கூறியுள்ளனர். மேலும் இந்த மாதிரியான தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை மீது உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தமிழக மக்கள் தஞ்சை பெரிய கோவில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் எக்காரணத்தைக் கொண்டும் மற்றும் மொழியியல் கல்வெட்டுக்கள் சேர்க்கப்படாது எனவும் கூறியுள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
