தனி ஒருவன் 2 அறிவிப்பால் வந்த குழப்பம்.. அரவிந்த்சாமி கதாபாத்திரத்தின் வில்லனே ஒரு பிரபல ஹீரோ தான்

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை பற்றிய செய்திகளை இயக்குனர் ஜெயம் ராஜா விரைவில் அறிவிக்கப் போவதாக அவரே பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆனால் அதில்தான் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது, அதற்கு வேறு யாரும் காரணம் இல்லை அந்த படத்தில் இடம் பெற்ற முக்கிய வில்லன் கதாபாத்திரம் அரவிந்த்சாமி தான்.

தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்தில் அரவிந்த்சாமி இறந்து விட்டதாக படம் முடிந்துவிடும். தற்பொழுது இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா மாட்டாரா என்பது ஒரு கேள்விக்குறி தான். ஆனால் அவருடைய தம்பி ஆகவும் அல்லது அவர் சாயலில் உள்ள மற்றொரு கதாபாத்திரம் இருப்பது போல படம் எடுக்க உள்ளனர்.

ஆனால் அப்படி எடுத்தால் அதில் அரவிந்த்சாமி நடிப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால் அந்த படத்திற்கு மிகவும் முக்கிய கதாபாத்திரமாக அமைந்த அரவிந்த் சாமி மீண்டும் நடிப்பதாக இருந்தால் அவருடைய சம்பளம் மீண்டும் எகிறும் எனக் கூறுகிறார்கள். எனவே அவருடைய கதாபாத்திரத்தை எடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு நடிகரையும் போடலாம் என ஜெயம் ராஜா ஆலோசித்து வருகிறார்.

இந்த படத்தில் அரவிந்த்சாமியின் ஸ்டைலிஷ் கதாபாத்திரத்திற்கு சமமாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் அது மிகவும் எளிதல்ல. எனவே பாலிவுட் பக்கம் போகலாமா என்று யோசித்து வந்தார் ஆனால் தமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகர்கள் நடித்து வந்தாலும் பெரிய அளவில் ஓடவும் இல்லை.

எனவே தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகரை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் ஜெயம் ராஜா. சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து வரும் விஜய் சேதுபதியை கூட நடிக்க வைக்க ஜெயம் ராஜா யோசித்து வருகிறாராம். ஏனென்றால் அவரைக் கொஞ்சம் மேக்கப் மற்றும் சில மாற்றங்களை செய்தால் ஸ்டைலிஷ் கதாபாத்திரம் மட்டுமல்ல அதற்கும் மேலாகவே அவர் இருப்பார் என கூறுகிறார்கள்.

விஜய் சேதுபதியின் கால்சீட் ஒத்துவரவில்லை என்றால் பாலிவுட்டில் உள்ள ஸ்டைலிஷ் நடிகர் வரலாம் என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது. அதேசமயம் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க வைக்கவும் இருக்கிறாராம் ஜெயம் ராஜா. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர அறிவிப்பு வந்தால் தான் யார் சரியாக இருப்பார் என தெரியவரும்.