fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வன்.. வைகோவை மிஞ்சிய அரசியல்வாதி என நெட்டிசன்கள் கிண்டல்

thangatamilselvan

Politics | அரசியல்

திமுகவில் இணையும் தங்க தமிழ்ச்செல்வன்.. வைகோவை மிஞ்சிய அரசியல்வாதி என நெட்டிசன்கள் கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றியவர் தங்க தமிழ்ச்செல்வன். தங்க தமிழ்ச்செல்வனுக்கும் டி டி தினகரன்க்கும் இடையில் சில கருத்து வேறுபாடு வந்தது.

தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி பற்றி புகழ்ந்து பேசினார். அதைப் பற்றிய மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. பின்பு தினகரனைபற்றி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து செய்தியாளர் பேட்டியளித்த தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி கொள்வார் என சரியான பதிலடி கொடுத்து சென்றார்.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் சிறிது காலம் அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆனால் திடீரென இன்றுவ் திமுக ஸ்டாலினை சந்தித்து அந்த கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து தேனியில் இருந்து சென்னையை புறப்பட்டு அவரது தொண்டர்களும் அவரும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக டூ அமமுக, அமமுக டூ திமுக என வைகோவை மிஞ்சிவார் என நெட்டிசன்கள் கிண்டல் பண்ணுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top