Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோவாக அறிமுகமாகும் தங்கர் பச்சானின் மகன். பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். போட்டோ உள்ளே.

தங்கர் பச்சான் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர்.

இவரது தந்தை தெருக்கூத்துக் கலைஞர், இவர் முறையாக திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் பயின்று பின்னர் சினிமா துறையில் நுழைந்தவர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் அசத்தியவர். இயக்குனராக இவர் எடுத்த படங்கள் அனைத்தும் சூழலுக்கு ஏற்ற சிறப்பான படங்கள் தான்.

vijith bachan

இந்நிலையில் இவரது மகன் விஜித் பச்சானை, தனது இயக்கத்தில் அறிமுகமாக்குகிறார். படப்பிடிப்பை முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

இப்படத்தை பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். பிரபுதயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். மிலனா, அஸ்வினி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை நகரை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. காதல், அதிரடி சண்டைகள், நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறும். தனது வழக்கமான படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top