Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோவாகும் தங்கர் பச்சானின் மகன். டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
Published on
தங்கர் பச்சான் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். இவர் தனது மகன் விஜித் பச்சானை, தனது இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார்.
இப்படத்தை பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். பிரபுதயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். மிலனா, அஸ்வினி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டக்கு முக்கு டிக்கு தாளம் என்பது தலைப்பு. இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டார்.

TMTT FLP
சென்னை நகரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். காதல், அதிரடி சண்டைகள், நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறுமாம்.
