ஜாதியை ஒழிப்பேனு சொல்லிட்டு பதவிக்காக புத்தி பேதலித்த தங்கர் பச்சன்! எந்த தொகுதி தெரியுமா.?

தங்கர் பச்சன் படங்கள் என்றாலே அது தனித்துவமாக தெரியும் கருத்துள்ள படமாக இருக்கும். குறைவான படங்கள் எடுத்தாலும் அவர் படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய தங்கர்பச்சான் எது பேசினாலும் நியாயமாக பேசக்கூடியவர்.

இவர் முதல் முதலில் 2002 ஆம் ஆண்டு எடுத்த அழகி திரைப்படம் அந்த காலகட்டத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய திரைப்படம். அதே போல் சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என அனைத்துமே யாராலும் மறக்க முடியாத திரைப்படங்கள்.

அனைத்தும் தமிழ் மொழி, கிராமங்கள் இதை சுற்றி மையப்படுத்தி இருக்கும். இதில் முக்கியமாக அழகி திரைப்படம் தற்போது உள்ள இளைஞர்கள் பார்த்தாலும் படத்தை கொண்டாடும் அளவிற்கு அந்த படம் அமைத்து இருப்பார்.

குறிப்பிட்ட காலங்களில் இவர் படங்கள் எடுப்பதில்லை. காரணம் இவர் படங்களுக்கான ரசிகர்கள் குறைவு, புது இயக்குனர்களின் வருகை. இப்போ உள்ள இயக்குனர்களுடன் போட்டி போட முடியாமல் தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு இருந்து வருகிறார்.

இவர் நினைத்தால் இப்போ உள்ள இளைஞர்களுக்கு தகுந்த மாதிரி படம் எடுத்து நல்ல சம்பாரிக்கலாம் ஆனால் அவர் விரும்பவில்லை அதனால் தனக்கு பிடித்த வேலையை அமைதியாக செய்து வருகிறார்.

தங்கர் பச்சன் பாமக வேட்பாளரா..?

முக்கியமாக இவருக்கு ஜாதி படங்கள் என்றாலே பிடிக்காது அதை பற்றி மேடையில் பேசும்போது ரொம்ப கோபமாக பேசுவார். இப்படி இருக்க இவர் தற்பொழுது 2024 நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் கடலூரில் பாமக சார்பாக போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

நல்ல அரசியல் செய்யக்கூடியவர், திறமையானவர், நேர்மையானவர் இவர் இவர் பாமகவில் தான் இருக்கிறார். பாமகவிற்காக தேர்தல் நிற்பது தவறு இல்லை ஆனால் ஜாதி இவருக்கு பிடிக்காது.

ஆனால் பிஜேபி கூட்டணியில் உள்ள பாமக சார்பாக இவர் நிற்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நல்லது நினைத்தாலும் கண்டிப்பாக இவர் இருக்கும் கூட்டணி எந்த நல்லதையும் செய்ய விட மாட்டார்கள் என்பது தங்கர் பச்சனுக்கு தெரியாதா.

குற்றவாளிகளின் கையில்தான் தற்பொழுது இந்திய கொடி, இந்திய அரசாங்கம் அமைந்துள்ளது என்று மேடைக்கு மேடை பேசுவார். கடைசியில் பிஜேபி சார்பாக தேர்தல் நிற்பது அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது.

எத்தனை நாள் தான் நானும் நல்லவனாக நடிக்கிறது. அதனால் இனிமேல் நானும் சாதாரண மனிதனாக இல்லை அரசியல்வாதியாக பணம் சம்பாதிக்க போகிறேன் என்று இறங்கிவிட்டார்.

Next Story

- Advertisement -