பாண்டியனை ஐஸ் வைக்க தங்கமயில் வாங்கிட்டு போகும் பொருள்.. ராஜி மாமா மூலம் நடக்கப்போகும் விபரீதம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் மிஸ் பண்ண கூடாது என்று தங்கமயில் ஸ்கெட்ச் போட்டு அனைவரையும் கவுக்கிறார். அந்த வகையில் முதல் விக்கெட்டாக பாண்டியன் கவுந்து விட்டார். அடுத்ததாக புருஷனையும் கைக்குள் போடும் விதமாக இருக்கிறதிலேயே நான்தான் நல்லவள். என்னைப்போல் நல்ல மனசு யாருக்கும் கிடையாது என்பதற்கேற்ப சரவணன் மனதில் ஒரு பிம்பத்தை போட்டு விட்டார்.

அந்த வகையில் சரவணன் போட்டிருந்த ஒரு சட்டை அவங்க அப்பா பாண்டியன் வாங்கி கொடுத்தது என்று சாதாரணமாக சொல்லி இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் எதிர்பார்க்காத விதமாக அதில் சட்னி கொட்டிவிடும். உடனே ஏதோ, பெரிய பிரச்சனை என்பது போல் அதை சலவை செய்து அதை போட்டோ எடுத்து குரூப்பில் அனுப்பி பெருமை பேசும் அளவிற்கு தங்கமயில் ஒரு சம்பவத்தை செய்து விட்டார்.

ரொம்பவே ஓவராக போகும் தங்கமயில்

உடனே வீட்டிலும் இதைப் பற்றி பாராட்டி பாண்டியன் பேசி, என் மருமகள் தங்கமயில் போல இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. அந்த அளவிற்கு நான் பார்த்து என் மகனுக்காக தேடிப்பிடித்து கட்டி வைத்திருக்கிறேன். என்று ஓவராக பாராட்ட ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து சரவணனும், என் பொண்டாட்டி போல பாசம் நல்லவள் யாரும் கிடையாது என்பது போல் ஓவராக சீன் போட ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் ஹனிமூன் முடிந்து போகும் பொழுது மாமாவுக்கு ஏதாவது பொருள் வாங்கிட்டு போகலாம் என்று சரவணன் இடம் சொல்லிவிட்டார். அதன்படி பாண்டியனுக்கு பிடித்த பொருளாக வாங்கி சர்ப்ரைஸ் பண்ணப் போகிறார். சும்மாவே பாண்டியன் ஓவராக ஆடுவார், இதுல வேற தங்கமயில் வாங்கிட்டு வரும் பொருளை பார்த்ததும் இப்படி யாருக்காவது ஏதாவது வாங்கிட்டு வர தோணிச்சா. ஆனா இதுதான் என் மருமகள் எனக்காக தேடி பிடித்து வாங்கிட்டு வந்திருக்கிறார் என்று புகழப்போகிறார்.

இதனை தொடர்ந்து ராஜியின் அண்ணன் குமரவேலுக்கு பொண்ணு பார்க்கும் விஷயம் முடிந்து விட்டது. இதனை அடுத்து கல்யாண வேலைகள் நடக்க இருப்பதால் ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த சக்திவேல் மட்டும், ராஜியின் அம்மா நகை எங்கே இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும் என முயற்சி எடுக்கிறார்.

அந்த வகையில் எதேர்ச்சியாக ராஜியின் மாமாவை வீட்டுக்கு வர வைக்கிறார். அவரும் எதுவும் தெரியாமல் சாதாரணமாக வீட்டிற்கு வந்து பேசிக்கொள்கிறார். அப்பொழுது அந்த நகை விஷயம் வெளிவரப் போகிறது. உடனே ராஜின் மாமா அந்த நகைக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாத போல் பேசிக்கொள்ள போகிறார். இதனால் ராஜி அப்பா, மீண்டும் காந்திமதி இடம் சண்டை போட போகிறார்.

அந்த நேரத்தில் ராஜியின் பாட்டி நகை அனைத்தும், ராஜிடம் தான் கொடுத்திருக்கிறோம் என்று உண்மையை போட்டு உடைக்க போகிறார். இதனால் கோபப்பட்ட சக்திவேல் மற்றும் முத்துவேல், பாண்டியன் வீட்டு வாசல் முன்னாடி நின்னு பிரச்சனை பண்ணி அவமானப்படுத்த போகிறார்கள். இது எதுவும் தெரியாத பாண்டியன் வீட்டில் பூகம்பமே வெடிக்கப் போகிறது.

இதில் வேற ராஜி டியூஷன் எடுக்க போற விஷயமும் வெளிவந்தால் பாண்டியன் அவ்வளவுதான் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தையே பண்ணி விடுவார். பாவம் இதில் பலிகடாக சிக்கப்போவது ராஜி மற்றும் கதிர் தான். ஏனென்றால் கதிர் பணத்தை எடுத்த விஷயமும் தெரிய வரப்போகிறது. ஆக மொத்தத்தில் அனைத்து உண்மையும் ஒரே நேரத்தில் பாண்டியனுக்கு தெரிய வரும் பொழுது கதிர் மற்றும் ராஜி வசமாக சிக்கி விடுவார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -