Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கரை சேர்க்க முடியாமல் தவித்து வந்த பாக்கியம், பாண்டியன் குடும்பத்தில் தங்கமயிலை பொய்யும் பித்தலாட்டமும் செய்து கரை சேர்த்து விட்டார். போன இடத்தில் சூதானமாக நடந்து மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்து சந்தோசமாக ஆட்டிப் படைப்பார் என்று பாக்கியம் நினைத்தார்.
அதன்படி அவ்வப்போது தங்கமயிலுக்கு போன் பண்ணி பல ஐடியாக்களை கொடுத்து சாவிக்கொத்தை வாங்கும் அளவிற்கு தூண்டி விட்டார். போதாதற்கு சரவணன் வாங்கிய சம்பளத்தையும் வாங்கி அதை நீ சேர்த்து வை என்று பல தில்லாலங்கடி வேலையை சொல்லிக் கொடுத்தார். ஆனால் இது எதுவுமே பாண்டியன் குடும்பத்தில் எடுபடியாகாது என்பதற்கு ஏற்ப சரவணன் நடந்து கொள்கிறார்.
ஒத்த பைசா இல்லாமல் வாய் சவடால் விடும் வாரிசுகள்
அதாவது வாங்கிய சம்பள பணத்தை மொத்தமாக அப்பா அம்மாவிடம் கொடுத்து விட்டார். பொண்டாட்டிக்கு செலவுக்கு ஏதாவது பணம் தேவைப்பட்டாலும் அதற்கு என்னுடைய அம்மாவிடம் போய் கேட்டுக்கொள் என்று சரவணன் சொல்லிவிடுகிறார். அது மட்டுமில்லாமல் தங்கமயில் அம்மா வீட்டுக்கு போகணும் என்றால் கூட நிம்மதியாக போக முடியவில்லை.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார்கள் என்று தங்கமயில் பாக்கியத்திடம் புலம்புகிறார். அளவுக்கு ஏதாவது பணம் வேண்டுமென்றால் கூட மாமா 200 ரூபாய் தான்ம் கொடுக்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்கியம், இதை இப்படியே விட்டு விடக்கூடாது உடனே அங்க போய் கேக்கணும் என்று சண்டைக்கு வரைஞ்சு கட்டி நிற்கிறார்.
ஆனால் தங்கமயிலின் அப்பா இதை கோபப்பட்டு டீல் பண்ண கூடாது. பொறுமையாக காரியத்தை சாதிக்க வேண்டும் என்று மறுபடியும் குடும்பத்துடன் சேர்த்து பிளான் போட ஆரம்பிக்கிறார்கள். இதையெல்லாம் தொடர்ந்து வீட்டிற்கு வந்த தங்கமயில், மாமனாரின் பிறந்த நாளை பற்றி மீனா ராஜி இடம் பேசுகிறார். பிறகு அதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டது என்று மீனா சொல்கிறார்.
அந்த வகையில் இன்னும் கேக் மட்டும் வாங்க வேண்டியது இருக்கிறது அது பிறந்தநாள் அன்னைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இதைப்பற்றி கணவர்களிடம் சொல்லலாம் என்று மூன்று பேரும் மொட்டை மாடியில் இருக்கும் செந்தில் கதிர் மற்றும் சரவணனை பார்த்து பேசுகிறார்கள். அப்பொழுது மாமனருக்கு ஐம்பதாவது பிறந்த நாள் வருகிறது அதை சிறப்புமாக பண்ணலாம் என்று சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் யோசித்த பாண்டியன் வாரிசுகள் மனைவி சொல்வதும் சரிதான் ஐம்பதாவது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். ஆனாலும் யாரிடமும் ஒத்த பைசா கூட கிடையாது. எது வாங்கினாலும் எது பண்ணினாலும் மீனா செய்தால் மட்டும் தான் முடியும். ஏனென்றால் மீனா மட்டும்தான் அந்த வீட்டில் சம்பாதித்து படத்தை தனியாக வைத்திருக்கிறார்.
இருந்தபோதிலும் மாமனாருக்கு தேவையான புது துணி மாமியாருக்கு தேவையான சேலை, வீட்டை அலங்கரிப்பதற்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கி விட்டார். இன்னும் மீதம் உள்ள கலவையும் மீனாதான் பார்க்கும் படியான சூழ்நிலை அங்கே இருக்கிறது. அதனால் மீனாவை நம்பி தான் அங்கு இருப்பவர்கள் அனைவரும் கூட்டணி போட்டு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Pandian Stores 2: பாண்டியன் அலட்சியத்தால் கேள்விக்குறியாகும் மீனாவின் வாழ்க்கை
- Pandian Stores 2: கதிருக்காக ஆக்ரோஷமாக களமிறங்கிய ராஜி
- Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்திற்கு கவச குண்டலமாக இருக்கும் மீனா