திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மகளை வீட்டை விட்டு அனுப்பிய பாண்டியன், வேலைக்குப் போக தயாரான தங்கமயில்.. கதிருக்கு வந்த புது பிரச்சனை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குழலி மீது தான் மொத்த தவறும் இருக்கிறது என்று உணர்ந்த பாண்டியன், எப்படியாவது புகுந்து வீட்டிற்கு மறுபடியும் அனுப்பி வைக்க வேண்டும் என்று பாண்டியன் முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரவைத்து விட்டார்.

கோமதியும் மகளின் டிரஸ்களை எல்லாத்தையும் பேக் பண்ணி வைத்து புகுந்த வீட்டில் எந்த வித பிரச்சினையும் பண்ணாமல் ஒழுங்கா வாழு என்று சொல்கிறார். ஆனாலும் குழலி கேட்காமல் நான் இங்கிருந்து எங்கேயும் போக மாட்டேன். இங்கு தான் இருப்பேன் என்று பிடிவாதமாக சொல்கிறார். பாண்டியன் சமாதனமாக பேசி அனுப்ப முயற்சி எடுக்கிறார்.

ஆனால் காது கொடுத்து கேட்காத குழலி பண்ணும் அலப்பறைக்கு கோமதி கன்னத்தில் பளார் என்று அறைய குடுத்து ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போ. இது ஒன்னும் உன்னுடைய வீடு கிடையாது, சந்தோசமா வந்தனா இரண்டு நாள் மூன்று நாள் இருந்துட்டு வந்தவழி பார்த்து ஒழுங்கா போய் விடு என்று அதட்டிய நிலையில் வாய மூடிக் கொண்டு குழலி வீட்டுக்காரருடன் போய்விட்டார்.

கோமதி அதிரடியான செயலை பார்த்த மீனா, ராஜி மற்றும் தங்கமயில் பயந்து போய் வாய் அடைத்து போய் அமைதியாக நின்று விட்டார்கள். உடனே உங்களுக்குள் இவ்வளவு ஒரு கோபம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதற்கு கோமதி பொய் சொல்லி டிராமா போட்ட எனக்கு பிடிக்கவே செய்யாது என்று சொல்லிய நிலையில் தங்கமயில் ரொம்பவே பயப்பட ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் தங்கமயில் பார்த்து நீ இன்னும் வேலைக்கு கிளம்பாமல் இங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய். மாமா சொன்னத மறந்துட்டியா என்று சொல்லிய நிலையில் கிளம்பி போ என்று அனுப்பி வைக்கிறார். ஆனால் தங்கமயில் படிக்கவில்லை என்பதால் வேலைக்கும் போக முடியாது இருந்தாலும் வீட்டில் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் கிளம்ப தயாராகி விட்டார்.

அடுத்ததாக கதிருக்கு கார் ஆஃபர் வந்து இருப்பதால் அதற்கு போய்க் கொண்டிருக்கிறார். அப்படி போகும் பொழுது காலேஜ் ஃபிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து ஒரு ட்ரிப்புக்கு அரேஞ்ச் பண்ணுவதால் அதற்கு ஒரு டிரைவராக கதிர் போகிறார். ஆனால் அதில் ஒரு பொண்ணு மட்டும் வந்து ரெண்டு பையனுங்களுடன் மாட்டிக் கொண்டார்.

இதனைப் பார்த்து பயந்து போன அந்த பெண்ணிடம் கதிர் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் உங்களை பத்திரமா உங்க வீட்ல போய் சேர்த்து விடுறேன் என்று சொல்கிறார். அந்த வகையில் அந்த காலேஜ் பசங்களை சமாளிக்கும் விதமாக கதிருக்கு புது பிரச்சினை வரப்போகிறது. இருந்தாலும் அந்த பெண்ணுடைய பாதுகாப்பை கருதி அதிக ரிஸ்க் எடுத்து காப்பாற்றி வீட்டில் விட்டு விடுவார்.

- Advertisement -

Trending News