தங்கல் படத்தில் நடித்த நடிகை ஜாய்ரா வாசிம் விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

Dangal star Zaira Wasim

ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகாட்டாக நடித்தவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாய்ரா வாசிம்(17). இதையடுத்து அவர் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்திலும் நடித்தார். ஜாய்ரா விஸ்தாரா விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பை சென்றுள்ளார்.

Dangal star Zaira Wasim

விமானத்தில் தனது இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த ஆண் அவருக்கு பாலியல் தொல்லையை கொடுத்துள்ளார். தனது காலால் ஜாய்ராவின் பின்பகுதியை உரசியுள்ளார். மேலும் கழுத்திலும் உரசியிருக்கிறார்.

Dangal star Zaira Wasim

விமானத்தில் தனக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்துள்ளது குறித்து ஜாய்ரா வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரு சிறுமியை போய்  இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அழுது கொண்டே பேசியுள்ளார் ஜாய்ரா.

மேலும் தன்னிடம் சில்மிஷம் செய்தவனின் காலையும் வீடியோ எடுத்துள்ளார் ஜாய்ரா. இப்படித் தான் பெண்களை பாதுகாக்கப் போகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை.

ஜாய்ரா வாசிமுக்கு நடந்த கொடுமை  அறிந்து கொண்ட  ஏர் விஸ்தாரா நிறுவனம் இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை தாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வது இல்லை என்றும் ட்வீட்டியுள்ளது.

அதிகம் படித்தவை:  அமிர்கான் படத்தில் டூ-பீஸ் உடையில் நடனமாடும் கத்ரீனா கைப். போட்டோ உள்ளே !