Tamil Cinema News | சினிமா செய்திகள்
பின் வாங்கும் ஸ்கெட்ச்! கெத்து காட்டும் தான சேர்ந்த கூட்டம்!
சூர்யா நடித்து நாளை வெளிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.
தனா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்ப்பு அதிகமாக இருப்பதால் சென்னையில் உள்ள மாயாஜாலில் 61 காட்சிகள் திரையிடப்படுகிறது.
அதேபோல் விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்கெட்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது காரணம் விக்ரம் அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொள்வதுதான். நாளை திரைக்கு வரும் இந்த படத்திற்கு வரவேற்ப்பு குறைந்துள்ளது.
ஸ்கெட்ச் படத்திற்கு ரசிகர்கள் வருகை மிக குறைவாகவே இருக்கிறது அதனால் சென்னையில் உள்ள மாயாஜாலில் மிக குறைவாக 13 காட்சிகள் திரையிடபடுகின்றன.
மேலும் பிரபுதேவா நடிக்கும் Gulaebaghavali = 4 Shows
