சூர்யா ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன், தம்பி ராமையா போன்றோர் நடித்து வருகின்றனர்.

ஆனால் இதில் நடிகை மீரா மிதுன் முக்கிய ரோலில் நடித்திருப்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்த மீரா மிதுன் நடித்த காட்சிகள் சஸ்பென்ஸாக இருந்தது.

சமீபத்தில், மீரா மிதுன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தான் நடித்ததை உறுதிபடுத்தியிருக்கிறார்.

surya

தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவர் தான் நடிப்பது பற்றிய விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்துவிட்டாராம். இவரது கதாபாத்திரம் இப்படத்தின் ரகசியம் போல் தெரிகிறது. பொங்கல் வரை பொறுத்திருப்போம்.

surya thana sernthu kootam

அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் சாங் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ‘சொடக்கு’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் டீஸர் நவம்பர் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படம் 2018 பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.