சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் 2018ஆம், ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி ஒருவேளை உண்மையெனில் இந்த படம் வெறும் 10 நாட்கள் மட்டுமே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.ThanaSernthaKootam-Suriya

ஏனெனில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 95% திரையரங்கில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

எனவே ஜனவரி 14 பொங்கல் தினத்தில் சூர்யா படம் வெளியானால் போட்ட முதலீடை பத்து நாட்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.சூரியாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பதால் வசூல் வந்துடும்னு திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கின்றனர்.