Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாளை மாலை ஒட்டுமொத்த இணையதளத்தையும் தெறிக்கவிடபோகும் தமிழ்படம்-2 படக்குழு

நடிகர் சிவா தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தமிழ்படம் 2 ஓரிரு தினங்களுக்கும் முன்புதான் படத்தின் டைட்டிலை மாற்றினார்கள், சமீபத்தில் வந்த படத்தின் டீசர் பல படங்களை கலாய்த்து வெளியிட்டிருந்தார்கள் அதனால் டீசர் ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் தியேட்டர்களில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் பலரையும் கலாய்த்து புகைப்படம் வெளியிட்டு வரும் ‘தமிழ்படம் 2’ படக்குழு தற்போது இந்த ‘டிக் டிக் டிக்’ படத்தை விமர்சிப்பது போல ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
இதில் டிக் டிக் டிக் படத்தில் விண்வெளியில் நகர்வதை போல, சிவா மற்றும் சதிஷ், ஹீரோயினுடன் சேர்ந்து விண்வெளியில் ரம்மி விளையாடுவது போல காட்டியுள்ளனர். மேலும் ட்விட்டரில் இதன் தயாரிப்பாளர் இப்போஸ்டரை வெளியிட்டதோடு அதில், இப்படத்தின் இன்ட்ரோ பாடல் வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
