சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாகவும், திஷா பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த் தயாரித்திருந்தார்.


ஆங்கிலத்தில் ஸ்பூஃப் மூவி என்று கூறப்படும் நையாண்டி திரைப்படங்கள் சர்வ சாதாரணம். அந்த வகை திரைப்படமாக இது அமைந்திருந்தது. அத்துடன் தமிழ் சினிமாவில் வெளியான முதல் முழு நீல ஸ்பூஃப் மூவி யாகவும் ‘தமிழ்ப் படம்’ அமைந்தது. ராமராஜன் தொடங்கி, விஜயகாந்த், ரஜினி என எல்லா ஹீரோக்களையும் கலாய்த்து,சில காட்சிகளை கேலியாக சித்தரித்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கும் திரைத்துறையிலிருந்து பல வித எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும், ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து முற்றிலும் புதிய பாணியில் இருந்த இப்படம் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

முழுக்க முழுக்க காமெடிப்படமாக அமைந்த இதுதான், சி.எஸ்.அமுதனுக்கு முதல் படம். எனவே, அவரின் அடுத்த படத்துக்கு ‘ரெண்டாவது படம்’ என்று தலைப்பு வைத்தார்.. ஆனால், பல வருடங்களாகியும் இன்னும் இந்தப் படம் ரிலீஸாகவில்லை.


‘தமிழ்ப்படம்’ பார்ட் 2 {TP2.0} எடுக்கப் போகிறார் சி.எஸ்.அமுதன். ‘மிர்ச்சி’ சிவாவே ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்; போன்ற தகவல் வெளியாகின. விக்ரம் வேதா வெற்றியை தொடர்ந்து சசிகாந்த் அவர்களே இந்த படத்தையும் தயாரிப்பது உறுதியானது. எனினும் மிர்ச்சி சிவா கலகலப்பு 2 வில் நடித்த காரணத்தால், இப்படம் ஆரம்பிப்பது தள்ளி போனது.

அதிகம் படித்தவை:  சூர்யா 'S3' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

தமிழ் படம் 2.0

சூப்பர் ஸ்டார் ஷங்கர் கூட்டணியில் உருவானது எந்திரன். அப்படித்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு 2.0 . இந்தியாவே எதிர்பார்க்கும் இப்படத்தின் டைட்டிலை நக்கல் பண்ணும் விதமாக TP2.0 என்று தன் படத்தை பற்றி சொல்லத்தொடங்கினார் அமுதன்.

இரண்டாம் பாகத்தின் தலைப்பை “தமிழ்ப் படம் 2.0 ” முடிவு செய்தது படத்தின் பூஜை நேற்று முன் தினம் நடைபெற்றது.

பூஜை முடிந்த சில மணி நேரங்களில் ”ஒய் நாட் ஸ்டுடியோஸ்” தங்கள் ட்விட்டரில்
‘ உங்களுக்கு ஒரு வினோதமான அறிவிப்பு வர உள்ளது. அதை நடிகர் சித்தார்த் செய்தால் நன்றாக இருக்கும். காத்திருங்கள்.’ என்ற ட்வீட் போட்டனர்.

அதன் பின்னர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரை ட்வீட் செய்தார் ..

‘எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். மகிழ்ச்சியாக உள்ளது போஸ்டர் ரிலீஸ் செய்வது. அமுதனின் தரமான படைப்பு. புரட்சி தயாரிப்பாளர் சசிகாந்த், அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா கூட்டணியில். விடு ஜூட்.” என்றார்.

அதிகம் படித்தவை:  Premam Fame Madonna Sebastian's Everafter - 'Veruthe' Song


மேலும் அந்த போஸ்டரில் படம் திரை அரங்கில் 25-05-2018 ரிலீஸ் என்றும்; படம் தமிழ் ராக்கர்ஸில் 26-05-2018 ரிலீஸ் என்றும் குசும்பாய் சொல்லியுள்ளார்கள்.

என்னப்பா எனக்கே தெரியாம இப்படி ரிலீஸ் பண்ணிடீங்க போஸ்டரை என்று அதிர்ச்சி மற்றும் ஆச்சிர்யமானார் இயக்குனர்.

இந்தப் படத்தில் சி.எஸ்.அமுதன்  பார்ட் வடிவில் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றும் படங்களைக் கையிலெடுத்து வறுக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் படத்தின் தலைப்பு அது போல்.

இந்நிலையில் போஸ்டரில் போலீஸ் அத்தியாயம் என்று கூறி இருப்பதால், இம்முறை அணைத்து போலீஸ் படங்களையும் கலந்து பங்கமாக கலாய்க்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகிவிட்டது.