Tamil Cinema News | சினிமா செய்திகள்
டி. ஆர் ஸ்டைலில் தன் மகனுக்காக பல அவதாரம் எடுத்துள்ள தம்பி ராமையா !
தம்பி ராமையா
இவரை நம்மில் பலருக்கு காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக தெரியும். எனினும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாத மறுபக்கம் ஒன்றும் இவருக்கு உள்ளது. புதுக்கோட்டை அருகில் கிராமத்தில் பிறந்தவர். தன் 20 வயதில் சினிமா ஆசையுடன் சென்னை வந்தவர். வாய்ப்பு அதிகம் கிடைக்காத காரணத்தால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். பல வருட போராட்டத்துக்கு பின் சின்னத்திரையில் வசனகர்த்தா , உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது.
டி ராஜேந்தர் மற்றும் பி வாசு இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அப்படியே நடிப்பது, காமெடி ற்றச்க் எழுதுவது என்று நகர்ந்தது இவர் சினிமா வாழ்க்கை. முரளி – நெப்போலியன் நடித்த “மனுநீதி” மற்றும் வடிவேலுவின் “இந்திர லோகத்தில் நா அழகப்பன்” படத்தை இயக்கியதும் இவரே.

KARUNAKARAN – UMAPATHY
உமாபதி
இவரின் மகன் உமாபதி. ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல ஒபெநிங் இவருக்கு தரவில்லை. இந்நிலையில் ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

s
இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல் படத்துக்கு இசையமைத்துள்ளதும் தம்பி ராமையா அவர்கள் தானம்.
