புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கிளுகிளுப்பான ஹீரோவாக தம்பி ராமைய்யா.. கலகலப்பான ராஜாக்கிளி பட ட்ரெய்லர் இதோ

Rajakili Trailer: தம்பி ராமையா ஹீரோவாக நடிக்கிறாரா, எதற்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை என சட்டென முடிவெடுத்து விடாதீர்கள். இந்த படத்திற்கு இவரால் மட்டும் தான் கதாநாயகனாக நடித்திருக்க முடியும். அப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் தம்பி ராமையா.

ராஜாக்கிளி பட ட்ரெய்லர் இதோ

இந்த படத்தின் கதை, திரைக்கதை போன்றவைகளை எழுதியது அவர்தான். இயக்கம் மட்டும் அவருடைய மகன் உமாபதி. படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி. ஒரு பெரிய தொழிலதிபர், தன்னுடைய வியாபாரத்தை எல்லா தொழில்களிலும் பரப்புகிறார்.

அதே நேரத்தில் கடவுள் முருகனையும், ஜோசியத்தையும் அதிகமாகவே நம்பக்கூடியவர். பெண்கள் விஷயத்திலும் கொஞ்சம் வீக்கான பேர்வழி. இவருடைய மனைவியாக சின்னத்திரை நடிகை தீபா ஷங்கர் நடித்திருக்கிறார். ஜோசியக்காரரின் பேச்சைக் கேட்டு 3 மனைவி கட்டிய இவருக்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசை வருகிறது.

அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் இடமே பேரம் பேசுகிறார். அந்தப் பெண்ணின் கணவராக நடித்திருப்பவர் தான் பாடகர் கிரிஷ். ஒரு கட்டத்தில் கிரிஷ்சை கொலை செய்து விடுகிறார் தம்பி ராமையா. அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது, இதை மொத்த ட்ரெய்லரிலும் காட்டி இருக்கிறார்கள்.

ட்ரெய்லரின் ஆரம்பம் கலகலப்பாகவும் முடிவு சிறந்த கருத்துடனும் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த கதை ஜோசியத்தை நம்பி தன்னைவிட சின்ன பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு கடைசியில் கொலை பணியை சுமந்து இறந்த சரவண பவன் அண்ணாச்சியின் கதை தான். ட்ரெய்லருக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

Trending News