வினோதைய சித்தம் போல் சம்பவம் செய்த தம்பி ராமையா.. வேட்டையன் ஞானவேலுக்கு ராஜாக்கிளி வைத்த செக்

சமுத்திரகனி, தம்பி ராமையா போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த படம் வினோதைய சித்தம். 2021ஆம் ஆண்டு ரிலீசான இந்த படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கித் தந்தது. ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட இந்த படம் அதன் பின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இப்பொழுது அந்த படத்தைப் போலவே தம்பி ராமையா ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது . அவ்வளவு தத்ரூபமாக, பெரும்புள்ளி ஒருவரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராமையா.

சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் பிச்சை ராஜகோபால். இவரது வாழ்க்கையில் பல இன்னல்கள் நடந்துள்ளது. அவற்றுள் ஒன்றுதான் ஜீவஜோதி கேஸ். தனது ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்த ஒருவரது மனைவி மீது இவருக்கு ஆசை வந்தது. அந்த பெண் பெயர் தான் ஜீவஜோதி.

ஜீவஜோதியை தனது மூன்றாவது மனைவியாக ஆக்கிக் கொள்ள ராஜகோபால் ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே அவரது கணவர் சரவணபவனின் அசிஸ்டன்ட் மேனேஜரான சாந்தகுமாருக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மலைப்பகுதியில் அவர் இறந்தவாறு மீட்கப்பட்டார்.

வேட்டையன் ஞானவேலுக்கு ராஜாக்கிளி வைத்த செக்

இந்த வழக்குக்காக ராஜகோபாலன் சிறை சென்றார். இந்த உண்மை கதையை தான் வேட்டையன் பட இயக்குனர் டிஜே ஞானவேல் “தோசா கிங்” என்ற படமாக எடுப்பதாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பே ராஜாக்கிளி என்று இதே கதையில் தம்பி ராமையா நடித்து முடித்து அந்த படம் வெளிவர இருக்கிறது. சரவணபவன் உரிமையாளரும், தம்பி ராமையாவும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News