அன்றே கணித்த தாமரை.. பிரியங்கா இவ்வளவு மோசமானவரா.? ஒரே நாளில் காலியான இமேஜ்

Priyanka: விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ தான் என சொல்லும் அளவுக்கு பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் சுவாரசியமாக இல்லை என்பது தான் உண்மை.

இதற்கு முக்கிய காரணம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தெரிவது பிரியங்காவின் முகம் தான். முன்பென்றால் டிடி, ரம்யா, ஜாக்லின், பாவனா என ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் இருந்தார்கள். எப்போது பிரியங்கா உள்ளே வந்தாரோ அதிலிருந்தே இவருடைய ஆதிக்கம் தான் இருக்கிறது.

இது வெளிப்படையாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரே நாளில் அதை பகிரங்கப்படுத்தி இருக்கிறார் மணிமேகலை. அந்த விஷயம் தற்போது பற்றி எரிந்து வரும் நிலையில் பிரியங்காவின் ஒரிஜினல் முகம் இதுதான் என பல வீடியோக்கள் மீடியாவை சுற்றி வருகிறது.

அதிலும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரியங்கா எந்த அளவுக்கு ஆணவத்தில் ஆடினார் என்பதை நாம் பார்த்தோம். அப்போதே தாமரை நிரூப் ஆகியோர் அவரின் குணத்தை அம்பலப்படுத்தினார்கள். அதிலும் தாமரையுடன் பிரியங்காவுக்கு இருந்த சண்டை குழாயடி பிரச்சனையாக தான் இருந்தது.

அன்றே கணித்து சொன்ன தாமரை

அந்த அளவுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் ஆயுதத்தால் தாக்காதது தான் பாக்கி. ஆனால் அப்போது கூட தாமரைக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் கூறிய அனைத்துமே உண்மைதான் என அந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது அந்த நிகழ்ச்சியில் தாமரை பிரியங்கா அனைவரையும் டாமினேட் செய்கிறார். தனக்கு கீழ் தான் அனைவரும் இருக்க வேண்டும். தன்னை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என சில வேலைகளை பார்ப்பதாக சொல்லி இருப்பார்.

கிட்டத்தட்ட மணிமேகலை விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக விஜய் டிவி அவரை தாங்கிப் பிடித்து வந்த நிலையில் இப்போது அவருடைய இமேஜ் காலி ஆகி இருக்கிறது. ஆனால் இதற்கும் சேனல் தரப்பு ஏதாவது ஒரு வேலையை பார்த்து பிரியங்கா நல்லவர் என காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

காற்றில் பறக்கும் பிரியங்காவின் மானம்

- Advertisement -spot_img

Trending News