fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

யாரும் என்னை மாதிரி ஆகிடக் கூடாது.. சொல்லக் கூடாததெல்லாம் சொல்லி கதறிய தாமரை

tamarai-selvi-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாரும் என்னை மாதிரி ஆகிடக் கூடாது.. சொல்லக் கூடாததெல்லாம் சொல்லி கதறிய தாமரை

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொடக்க நாளிலிருந்தே போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் லக்ஸரி பட்ஜெட்டிற்காக ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ என்ற டாஸ்க் நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை சக போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சியை கண்ணீரும் கம்பளியுமாக மாற்றிவிட்டார்.

இவர் 5 பேருடன் பிள்ளையாக பிறந்து சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அதன் பிறகு தன்னுடைய மாமா நாடகம் போடும் குரூப்பில் சேர்த்து விட்டதாகவும், அப்போது தாமரையை பலரும் அவமானப்படுத்தியதாகமும் கண்ணீர் விட்டார்.

அதன் பிறகு ஒரு குழந்தையுடன் இருப்பவரை திருமணம் செய்துகொண்டு அவரிடமும் படாதபாடு பட்டாராம். அப்போதெல்லாம் பன்றிகள் சாப்பிடும் சாப்பாடு தான் தனக்கும் உணவாக இருந்தது. அந்த சமயத்தில் வளர்ப்பு மகன் தனக்கு ஒரு மகன் என பிறந்திருக்கிறது.

பின்பு அங்கிருந்து தன்னுடைய மகனை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு மற்றொருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போது, தாமரையின் மகனை இரண்டாவது கணவர் நன்றாகவே பார்த்துக் கொண்டாராம்.

இரண்டாவது கணவனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இருந்ததால் மீண்டும் தாமரை நாடகத்தில் நடிக்க துவங்கி இருக்கிறார். பின்பு முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை பிடிங்கி சென்று விட்டதாகவும் அந்த குழந்தை தன்னை தவறான தாயாகவே நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கதறி அழுத தாமரையை பார்த்த சக போட்டியாளர்களும் கண்ணீர் வடித்தனர்.

thamarai-selvi-bb5-cinemapettai

thamarai-selvi-bb5-cinemapettai

இதற்கிடையில் நாடகத்தில் நடித்த பணத்தின் மூலம் வாங்கிய நகையை வைத்து வீடு ஒன்று வாங்கி உள்ளதாகவும், ரசிகர்கள் நிறைய பேர் உதவியதாகவும், தாமரைப் பகிர்ந்துகொண்டார்.

வீடு  வாங்கும் போது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான், பிக்பாஸ் வீட்டில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த பிக் பாஸ் வீட்டில் நாடகக் கலையை பற்றி பறைசாற்றுவதாகவும், நாடகக் கலைஞர்களை உருவாக்குவதே தன்னுடைய குறிக்கோளாக கொண்டுள்ளேன் என்று தாமரை உருக்கமாக பேசினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top