இதே எண்ணத்துடன் சுற்றும் தாமரை.. இறுதிநாள் வரை செல்வது சந்தேகம்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தாமரை மற்ற போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து கடுமையாக விளையாடி வருகிறார். இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக தாமரை ஒரு சிறு பிரச்சனையை கூட மிகைப்படுத்தி அதை பெரிய அளவில் பேசிவருகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டை அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக தாமரை, பவானியை தனக்கு பிடிக்காது என்று அனைவரின் முன்பும் வெளிப்படையாக கூறினார்.

அதை கூறியதோடு விடாமல் தன்னுடைய பழைய வஞ்சகத்தை எல்லாம் அவ்வப்போது பவானியிடம் காட்டி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் செய்த ஒரு விஷயம் தற்போது விவாதமாக மாறியுள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் செய்யப்பட்ட பாயாசத்தை தாமரை அனைவருக்கும் கொடுத்துள்ளார். ஆனால் பவானியிடம் மட்டும் தாமரை கொடுக்கவில்லை.

அதை கவனித்த ராஜு, தாமரையை கூப்பிட்டு ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார். அதற்கு தாமரை எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் தரமாட்டேன் என்று கூறினார். இதற்கு ராஜு பொறுமையாக எல்லாருக்கும் கொடுக்கும் போது அவளை மட்டும் ஒதுக்குவது நல்லா இல்லை என்று சொன்னார்.

ஒருவர் கூறுவதை கேட்டு விட்டால் அது தான் தாமரை இல்லையே. அதனால் ராஜூவிடம், தாமரை ஒரு சின்ன விஷயத்தை எதுக்கு பெருசு படுத்துறீங்க என்று கோபமாகக் கூறினார். இவ்வளவு பேசும் தாமரை தன்னை யாராவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை பெரிய சண்டையாக மாற்றுவது ஏன்.

ஒரு முறை தாமரை, பிரியங்கா சமைத்த உணவை சாப்பிட மறுத்து விட்டார். அவர் செய்தால் சரி என்று நினைப்பவர் அதையே பவானி செய்தால் பெரிய குற்றமாக சொல்வது நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களை எரிச்சல் ஆக்குகிறது.

இதனால் வரும் வாரங்களில் தாமரைக்கு பார்வையாளர்களின் ஓட்டுக்கள் கணிசமாக குறையும் என்று தெரிகிறது. தாமரை அவரின் இந்த செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் இறுதிப் போட்டி வரை அவர் செல்வது சற்று கடினமே.

thamarai-cinemapettai8
thamarai-cinemapettai8