Connect with us
Cinemapettai

Cinemapettai

thamarai bigboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தாமரையை மாற்றிய பிக்பாஸ்.. போற இடமெல்லாம் செய்யும் அலப்பறை

சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் அதில் மக்களை கவர்ந்த ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் மட்டுமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை பங்கேற்று இருக்கிறார்கள். அதில் பலர் மக்களின் ஆதரவைப் பெற்று பிரபலமாக இருக்கின்றனர். ஒரு சிலர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இன்றுவரை ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்களின் ஆதரவை பெற்று பிரபலமாக இருப்பவர் நாடக கலைஞர் தாமரைச்செல்வி.

அந்த நிகழ்ச்சியில் இவரின் துடுக்குத்தனமான பேச்சும், சில வார்த்தைகளும் பல விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தாமரை தன் கணவருடன் பங்கேற்று வருகிறார்.

அதில் இவருடைய நடனம் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தாமரை குறித்து சில விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. அதாவது சமீபகாலமாக தாமரை ஓவர் பந்தா காட்டி வருவதாக சிலர் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு தாமரையிடம் மிகவும் பிடித்த குணமே அவருடைய எளிமையும், இயல்பாக இருக்கும் அவருடைய குணமும் தான். ஆனால் அவர் தற்போது அதற்கு நேர்மாறாக ஓவர் மேக்கப், அலட்டல் பேச்சு என்று இருப்பது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் சமீபகாலமாக அளித்து வரும் பேட்டிகளில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய குணம் பல நடிகர்களுக்கு பிடித்ததாக எனக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார்கள் என்று கூறினார். மேலும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் எதற்காக இவ்வளவு பந்தா காட்டுகிறீர்கள் என்றும், கொஞ்சமாவது நம்புவது போன்று பேசுங்கள் என்றும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவரின் வாழ்வையே மாற்றி விடும் என்பதற்கு தாமரை ஒரு உதாரணமாக இருக்கிறார்.

Continue Reading
To Top