பாகுபலி படம் ஓடுதோ இல்லையோ.. அந்தப் படத்தைப் பற்றி வரும் செய்திகள் நல்லாவே ஓடுது.

அதிலும் அனுஷ்கா -பிரபாஸ் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இருவருக்கும் படப்பிடிப்பின் போதே காதல் வந்து விட்டது என்கிற செய்தி வைரலாக பரவுகிறது.

இதில் பாகுபலி முதல் பாகத்தில், பிரபாஸின் காதலியாக படம் முழுக்க வந்து தூள் கிளப்பிய தமன்னா, பாகுபலி படத்தில் தான் நடித்த காட்சிகள் எதுவும் இல்லை என்றவுடன் ரொம்பவே கொதித்துப் போய் விட்டார்.

இதில் அனுஷ்காவின் சதி இருக்கிறது என்று சமீபத்தில் கொளுத்திப் போட்டார். அவரால் பிரபாஸ் – அனுஷ்கா காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் இப்படி கொதிக்கிறார் என்று தெலுங்கு பட ரசிகர்கள் வலைத்தளங்களில் பொங்கி எழுந்தார்கள்.

குறிப்பாக அனுஷ்கா பக்தர்கள் தமன்னாவை வசைபாடி தீர்த்தார்கள். தமன்னா ரசிக கண்மணிகள் விடவில்லை..

“எங்க தமன்னாவும் தான் பாகுபலி காதலி. இப்போ ஏங்க ஆளு நினைச்சாலும் பாகுபலியை லவ் பண்ணி கல்யாணம் செய்து காமிப்பாங்க.. பாக்குறியா..? பாக்குறியா..? என்று சிங்கம் சூர்யா போல கர்ஜிக்க..

இப்போ விஷயம் பத்திரிக்கை மற்றும் சேனல்களில் விவாதிக்கும் அளவில் சீரியஸ் ஆகி விட்டது.

விரைவில் தமன்னா பிரபாசை லவ் பண்ணிக் கட்டுவார் என்று கூறுகிறார்கள். இன்னொரு தரப்போ.. காதலும் இல்லை ஒன்றும் இல்லை..இது படக் குழுவினரால் கிளப்பப்பட்டது..! படத்தின் ப்ரமோஷன்களில் இதுவும் ஒன்று என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

அடப் பாவிங்களா.. தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சனை ஓடிட்டு இருக்குது..தண்ணீர் இல்லை,மழை இல்லை, விவசாயிகள் பிரச்சனை, அரசியல்னு தூக்கம் கெட்டு அலையுது..!

ஆந்திராவுல அனுஷ்கா-தமன்னா காதல் போட்டி ஒரு பெரிய பிரச்சனை..! நடத்துங்க..நடத்துங்க..