Connect with us

Cinemapettai

தர்மதுரை படத்தில் செய்ததை விக்ரம் படத்தில் ஏன் செய்யவில்லை தமன்னா.!

Cinema News | சினிமா செய்திகள்

தர்மதுரை படத்தில் செய்ததை விக்ரம் படத்தில் ஏன் செய்யவில்லை தமன்னா.!

பொதுவாக வட இந்திய நடிகைகள் யாருமே தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவதில்லை.

thamanna

ஜோதிகா பிசியான நடிகையாக இருந்தபோது மாயாவி படத்தில் சொந்தக்குரலில் பேசினார். அதன் பிறகு சொந்தக்குரலில் பேசி நடித்த வட இந்திய நடிகை தமன்னாதான்.

இருபத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அவர் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே படம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம்தான். இந்த படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் ‘தேவி’, ‘கத்திச்சண்டை’ ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் எல்லாம் தமன்னாவுக்கு இரவல் குரல்தான்.

thamanna

விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படம். இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘இருமுகன்’ படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

பொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியானது.

Sketch

இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ என்ற இந்த படத்தில் நடித்துள்ளார் தமன்னா! விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டப்பிங் உட்பட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது வேலைகள் நடந்து வருகின்றன. ‘தர்மதுரை’யில் சொந்த குரலில் பேசி நடித்த தமன்னாவுக்கு இப்படத்தில் மானசி என்ற டப்பிங் கலைஞர் குரல் கொடுத்துள்ளார்.

‘தர்மதுரை’யில் அழகாக தமிழ் பேசி நடித்த தமன்னா ஏன் தொடர்ந்து சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top