தளபதி 66 படத்தில் இத்தனை பாடல்களா.? அனிருத்துக்கு போட்டியாக சம்பவம் செய்யும் தமன்

விஜய்யின் படங்கள் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்க காரணம் படத்தில் உள்ள பாடல்கள் மற்றும் நடனம் தான். இந்த இரண்டுமே விஜய்யின் படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் விஜயின் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

அதுவும் படம் முடிந்த பிறகு கடைசியில் தான் அந்த பாடல் வந்தது. ஆனாலும் ஜாலியோ ஜிம்கானா பாடல் யூட்யூபில் வெளியான போது பல லட்சக்கணக்கான வியூஸ் தாண்டி சாதனைகள் படைத்தது. இந்நிலையில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துவரும் தளபதி 66 படத்தில் தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை தமன் பகிர்ந்துள்ளார். அதாவது இயக்குனர் விஜய்யை மனதில் வைத்து ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளார். விஜய்க்கு அவ்வளவு கனகச்சிதமாக அந்த கதாபாத்திரம் பொருந்தியுள்ளது என்ற தகவலைக் கூறியுள்ளார்.

மேலும் தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் உள்ளது. அதில் ஒன்று மிகவும் எமோஷனலான பாடலாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஒரு பாடலை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் விஜய்யின் தீவிர ரசிகன் தமன் என்பதால் கண்டிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலையும் செதுக்கி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் விஜய் தனது சொந்தக் குரலில் ஒரு பாடல் பாட உள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

தமன் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும் இப்போதுதான் விஜயுடன் சேரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு ஒரு விஜய் ரசிகனாக இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் விரும்பும்படி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே தமிழ் சினிமா என்றால் அனிருத் மட்டும்தான் இசையமைத்து கொண்டிருக்கிறார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனை முறியடிக்கும் விதமாக தமனின் இசை ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்