ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வாரிசு படத்தைப்பற்றி அப்டேட் கொடுத்த தமன்.. விஜய் படத்துல அது இல்லாம எப்படி?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவு பெற்றது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் இப்படத்தின் மீது விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் விஜய்யின் பிறந்த நாளன்று வாரிசு படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது தமன் வாரிசு படத்திற்கான அப்டேட் பற்றி கூறியுள்ளார். அதாவது இப்படத்தின் இயக்குனர் வம்சியும், நானும் விஜயின் தீவிர ரசிகர்கள். இதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறோம். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளது.

விஜய் படங்கள் என்றாலே அதில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் விஜய்யின் நடனம் வேற லெவலில் இருக்கும். அந்த வகையில் வாரிசு படத்திலும் மாசான பாடல்கள் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலிலும் எமோஷன் நிறைந்திருக்கும் என தமன் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் பாடல் ஒலிக்கும் போது திரையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆடுவார்கள் என்பது நிச்சயம் என்று தமன் நம்பிக்கை அளித்துள்ளார். அதாவது தமன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தாலும் முதல் முறையாக விஜயுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார்.

இதனால் விஜயின் தீவிர ரசிகரான தமன் ஒவ்வொரு பாடல்களையும் செதுக்கியுள்ளார். மேலும் தமன் தற்போது கொடுத்துள்ள அப்டேட் ஆல் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் பாடல்களை பார்ப்பதற்காக ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகயுள்ளது.

- Advertisement -

Trending News