fbpx
Connect with us

தலைவி படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம், கெட் அப் போட்டோ வெளியானது! தாறுமாறு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவி படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம், கெட் அப் போட்டோ வெளியானது! தாறுமாறு

மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக வைத்து தலைவி திரைப்படமாக ரெடியாகி வருகின்றது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா வேடத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது நாம் அறிந்த விஷயமே. ஏற்கனவே கங்கணா போட்டோஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று எம்ஜிஆர் அவர்களின் 33 ஆவது நினைவு நாளுக்கு படக்குழு போட்டோ வெளியிட்டது. அச்சு அசல் எம்ஜிஆர் ஆகவே தோன்றினார் அரவிந்த் சுவாமி.

நேற்று சமுத்திரக்கனி  ட்விட்டர் பக்கத்தில் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். படத்தில் ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

samuthirakani

70, 80 களில் கட்சியின் சாணக்கியன் என சொல்லப்பட்டவர். எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பர். தான் தயாரிக்கும் படங்கள் வாயிலாக அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பரப்பியவர்.

இப்படத்திற்காக ஆர்.எம்.வீரப்பன் மாதிரியே நடப்பது, பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சமுத்திரக்கனி நடித்திருப்பதாகவும் சொல்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

thalivi movie stills

Continue Reading
To Top