Connect with us

Cinemapettai

jaya

India | இந்தியா

தலைவி படத்துக்கு தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு

சென்னை: தலைவி படத்திற்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதேபோல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப்சீரியஸாக தயாரித்து வருகிறார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப் படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது மனுவில், அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top