Videos | வீடியோக்கள்
ரிலீஸ் தேதியுடன் கதிகலங்க வைத்த லோகேஷ்.. ஹாலிவுட் சினிமாவையே அதிர வைத்த ப்ரோமோ வீடியோ
இப்படி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக டைட்டிலை அறிவித்திருக்கிறது.
விஜய் இப்போது தளபதி 67 படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய அப்டேட் இப்போது அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் நேற்று பட குழு வெளியிட்டு இருந்த ஒரு அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் உச்சகட்ட பரபரப்புக்கு கொண்டு சென்றது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.
இதனால் விஜய் ரசிகர்கள் நேற்று மாலை முதலே ட்விட்டர் தளத்தில் ஏகப்பட்ட ஹாஷ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இப்போது படத்தின் தலைப்பு இதுதான் என்ற ஒரு பட்டிமன்றமும் நடைபெற்று வருகிறது. அதற்கேற்ற போல் பட குழுவும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது. அதை வைத்தே ரசிகர்கள் பல தலைப்புகளை யூகித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதிலும் குருதிப்புனல் என்ற தலைப்பு தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்ற ஒரு விவாதமும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த படத்தில் அர்ஜுன் நடிப்பதை தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தது. அதேபோன்று லோகேஷுக்காக கமலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பார் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக பட குழு வெளியிட்டிருந்த அந்த போஸ்டரும் குருதி கொப்பளிக்க இருந்தது. அதனாலேயே இப்போது தளபதி 67 திரைப்படத்திற்கு குருதிப்புனல் என்ற பெயர் தான் வைக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க Eagle என்ற ஒரு தலைப்பும் ட்ரெண்டாகி வருகிறது.
Also read: திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்.. தளபதி 67 மிரட்டும் கதாபாத்திரம்
மேலும் ரசிகர்கள் நேற்று வெளியான போஸ்டரையும், கழுகு போட்டோவையும் ஒப்பிட்டு கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். இப்படி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக டைட்டிலை அறிவித்திருக்கிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவையே அதிர வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு Leo என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு வீடியோ மூலம் படகுழு அட்டகாசமாக வெளியிட்டு இருக்கிறது. இப்படி ஒரு தலைப்பை ரசிகர்கள் உட்பட யாரும் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதனால் தற்போது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறி இருக்கிறது.
