பழைய குருடி கதவை திறடி என மீண்டும் அவரிடம் தஞ்சமடைந்த விஜய்.. கதிகலங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!

சமீபகாலமாக விஜய் இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறார் என சந்தோசமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய கூட்டணியுடன் இணைந்துள்ளது ரசிகர்களை கொஞ்சம் வேதனைப்பட வைத்துள்ளது.

தளபதி விஜய் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கமர்ஷியல் படங்களை தாண்டி வேறு எதையும் விஜய் தற்போது வரை முயற்சி செய்யவில்லை. அப்படி முயற்சி செய்த சில படங்கள் தோல்வியை தழுவியதால் மீண்டும் தன்னுடைய கமர்ஷியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் பழைய கதாபாத்திரங்களில் இருந்து சற்று மாறுபட்டு இருந்தது ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து இளம் சென்சேஷனல் இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலிப்குமர் என்பவருடன் தளபதி 65 படத்தில் கூட்டணி சேர்வது தளபதி ரசிகர்கள் கொண்டாட வைத்தது. இதிலும் வித்தியாசமான விஜய்யை பார்க்கலாம் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்திற்காக விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விஜய் அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் வெற்றியை பெற்றிருந்தாலும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களை அட்லீ மிகவும் சோதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vijay-atlee-thalapathy66
vijay-atlee-thalapathy66

ஏற்கனவே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல்வேறு நிதி சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து தமிழ் சினிமாவில் மீண்டு வந்து விடலாம் என நினைத்தனர். ஆனால் அதில் விஜய் கல்லை தூக்கி போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தளபதி 66 படத்திற்கு அட்லீயை ஓகே செய்து கொள்ளுங்கள் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஜய் கூறிவிட்டதாக தெரிகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமோ விஜய்யிடம் இயக்குனரை மாற்றலாம் என சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சோதனையின் உச்சத்தில் இருக்கிறதாம்.