சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகளுக்கான வேலைகள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒரு பாடல் காட்சி மற்றும் காதல் காட்சிகள் படமாக்க உள்ளதால் சென்னையில் சன் மால் என்ற பெயரில் மால் செட் பிரமாண்டமாக போடப்பட்டு வருகிறது. மேலும் மே இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்க இருந்தன.
ஆனால் தற்போது சென்னையில் அளவுக்கதிகமாக கொரானா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் விஜய் தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்காரணமாக தற்போதைக்கு ஷூட்டிங்-க்கு வர வாய்ப்பில்லை என கூறிவிட்டாராம் தளபதி.
விஜய் நம்பி பல கோடிகள் செலவு செய்து செட் போடப்பட்டுள்ளதால் முடிந்தவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யை அழைத்து வந்து ஒரு பாடல் காட்சியை மட்டும் படமாக்கி முடித்து விடலாம் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஆனால் விஜய் தற்போதைக்கு அனைவரின் உயிர் தான் முக்கியம் எனக் கூறி படப்பிடிப்பையும் செட் போடுவதையும் நிறுத்தச் சொல்லுமாறு சன் பிக்சர்ஸுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சரி, பெரிய நடிகரே சொல்லிவிட்டார், இனி மறுப்பதற்கு எதுவுமில்லை என தன்னுடைய செட் பணியாளர்களுக்கு விடுமுறை கொடுத்து தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
மீண்டும் கொரானா பிரச்சனை எல்லாம் ஓரளவு குறைந்த பிறகு தான் படப்பிடிப்புக்கு வருவேன் எனவும் விஜய் கூறிவிட்டாராம். இதுதான் சாக்கு என நெல்சன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் படத்தின் இறுதிகட்ட பிசினஸ் பணிகளை கவனிக்க சென்று விட்டாராம்.