
விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளதாம்.
முன்னதாக ஜார்ஜியா நாட்டில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தளபதி 65 வட்டாரங்களில் இருந்து தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதைப்போல் தளபதி 65 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான போதே அதில் துப்பாக்கிகள், சேசிங் என மிரட்டலாக இருந்தது. ஆனால் இதெல்லாம் படத்தில் வருமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்தனர்.
அதிலும் குறிப்பாக ஒரு கார் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை பெரிதும் எதிர்பார்க்க செய்தது. இதேபோல்தான் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பயன்படுத்திய கார் ஒன்று பின்னர் செம பேமஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 படப்பிடிப்பில் விலை உயர்ந்த மஞ்சள் நிற பெராரி கார் ஒன்றை வைத்து காட்சிகள் எடுக்கப்படும் தளபதி 65 படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்ததும் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு மரணச் மாஸ் காட்சி ஒன்று உள்ளது என்ற கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.
