ஜார்ஜியாவில் ஸ்வெட்டருக்கு மேல் சால்வை, கூலிங் கிளாஸ் என கலக்கும் விஜய்.. தளபதி 65 பட புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.

மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜய் சைக்கிளில் வந்ததுதான் இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒருபக்கம் என தங்களுக்கு தெரிந்த வகையில் அதை பரப்பி வருகின்றனர்.

ஆனால் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அன்றிரவே விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றார்.

ஜார்ஜியா நாட்டில் முதல் நாள் தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொண்ட தளபதி விஜய்யின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதேபோல்தான் சில மணிநேரங்களுக்கு முன்பு சூர்யா40 படத்தின் போஸ்டரை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது தளபதி ரசிகர்களையும் தன் வசப்படுத்தியுள்ளது சன் நிறுவனம்.

thalapathy65-cinemapettai
thalapathy65-cinemapettai

புரோமோஷன்ல உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்