Tamil Cinema News | சினிமா செய்திகள்
துப்பாக்கி-2 படத்தில் நான்தான் ஹீரோயின்.. அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட பிரபல நாயகி
தளபதி விஜய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து எப்படியாவது ஒரு வெற்றி பெற்று விட முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் ஏ ஆர் முருகதாஸ்.
துப்பாக்கி படத்தை விஜய் கூட மறந்து விடலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அப்படி ஒரு வெற்றியைப் பெற்றது அந்த படம். வசூல் சாதனைகளையும் வேற லெவலுக்கு சென்றது.
அதன் பிறகு விஜய் முருகதாஸ் மீண்டும் இணைந்து கத்தி, சர்கார் படங்களில் இணைந்தனர். இருந்தாலும் துப்பாக்கி அளவுக்கு இல்லை என்பதே ரசிகர்களின் ஏமாற்றமாக உள்ளது. இதனால் தற்போது தளபதி 65 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏகப்பட்ட இயக்குனர்கள் லிஸ்டில் வந்து போய்க் கொண்டிருந்த வேளையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ். அவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக உடனடியாக வாய்ப்பு கொடுத்து விட்டார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அது கண்டிப்பாக துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் வேறு படம் என்றால் ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். மீண்டும் விஜய்யுடன் இணைய விரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் நேரடி ஒளிபரப்பில் இந்த தகவலை கூறியுள்ளார். இதனால் கண்டிப்பாக துப்பாக்கி 2 படம் தான் உருவாகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

kajal-agarwal
இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்களுக்கு திண்டாட்டம்தான்.
