Connect with us

Cinemapettai

தளபதி65 பட வாய்ப்பை என் காதலருக்கு கொடுங்க.. விஜய்யிடம் மல்லுக்கட்டிய முன்னணி நடிகை

vijay-thalapathy65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி65 பட வாய்ப்பை என் காதலருக்கு கொடுங்க.. விஜய்யிடம் மல்லுக்கட்டிய முன்னணி நடிகை

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தில் விஜய் விரைவில் நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

முருகதாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தற்போது தளபதி 65 படத்திற்கான புதிய இயக்குனர்களை தேடிக் கொண்டிருக்கிறார் விஜய்.

இதற்கிடையில் அனிருத் சிபாரிசு செய்ததில் விஜய் நெல்சன் என்பவரின் கதையில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

முழுக்க முழுக்க காமெடி கலந்த அதிரடி கதையில் உருவாகியுள்ள அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இடையில் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என விஜயிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்குனராக பிரபலமானவை விட நயன்தாராவின் காதலராக பிரபலமானது தான் அதிகம். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த சூர்யாவின் நிலைமை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதனால் உஷாரான விஜய் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். விக்னேஷ் சிவன் இதுவரை இயக்கிய படங்களில் நானும் ரவுடிதான் என்ற படம் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

vijay-sunpictures

vijay-sunpictures

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top