Connect with us

Cinemapettai

தளபதி65 படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட சன் பிக்சர்ஸ்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி65 படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட சன் பிக்சர்ஸ்!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரர் தான் இளைய தளபதி விஜய். இவருடைய ஒவ்வொரு படத்தையும் அவருடைய ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் வரும் பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியாக உள்ளதால், அதனை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

எனவே மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதியின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

ஆனால் இந்தப் படத்திற்கு இன்று வரை பெயர் வைக்கவில்லை. இணையத்தில் படத்தின் பெயர் டார்கெட் ராஜா என வைரலானது. இந்த படம் மூன்று கட்டமாக எடுக்கப்பட்டு அடுத்த வருடம் தீபாவளி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவெடுத்துள்ளது.

அதேபோல் இந்தப்படத்தில் இயக்குனரான நெல்சன் ஏற்கனவே நயன்தாராவை வைத்து இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார். அதேபோல் தற்போது தளபதி விஜய்யை வைத்து வித்தியாசமான கோணத்தில் செம மாஸ் ஆன படத்தை உருவாக்க உள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எனத் தொடங்கி உள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகி மற்றும் துணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

vijay-65

vijay-65

எனவே விரைவில் தளபதி 65 படத்திற்கான தலைப்பு தேர்வு செய்யப்பட்டு கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top