நெல்சனிடம் தளபதி 65 பட அப்டேட் கேட்டு ரசிகர்களிடம் மாட்டிவிட்ட பிரபல நடிகர்.. ஒரே குசும்பு தான்!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தை தான். இதற்கான அறிவிப்பு வந்ததோடு சரி. அதன் பிறகு தற்போது வரை அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனரான நெல்சன் தன்னுடைய அசிஸ்டண்ட் டைரக்டரும் இரண்டாவது பட நடிகருமான சிவகார்த்திகேயனின் டான் பட அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரிப்ளை அளித்த குறும்பான வேலை தான் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரே பதிவில் மொத்த தளபதி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் பணியாற்றும் போது இருவருக்கும் நல்ல பழக்கம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் சொந்தத் தயாரிப்பில் நெல்சன் உடன் இணைந்து டாக்டர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்தின் வீடியோவை பார்த்து ரிப்ளை செய்த நெல்சனிடம், டாக்டர் படத்தின் அப்டேட் மற்றும் தளபதி 65 படத்தின் அப்டேட் கேட்டுவிட்டு கூடவே எப்படி மாட்டி விட்டேன் பாத்தியா! ஜாலியாக பேசிய அவர்களது உரையாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

nelson-sk-cute-chat
nelson-sk-cute-chat

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் டாக்டர் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்