Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 64 அப்டேட்.. இது தான் விஜய்.. நெகிழ்ந்துபோன விஜய்சேதுபதி
அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பிகில்’ படம் குறித்து இணையதளங்களில் சிலர் நெகட்டிவான விமர்சனங்களை செய்து வந்த போதிலும் விஜய் ரசிகர்களின் வருகையால் படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. விஜய் அடுத்ததாக ‘தளபதி 64’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
விஜய் உடன் முதல்முறையாக விஜய் சேதுபதி நடிக்கிறா. அதுவும் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதில் இவர்களை தவிர, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இதுவரை. விஜய் – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் ‘தளபதி 64’ படக்குழுவினரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி பல மொழிகளில் நடித்து வருகிறார். ”ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி சேதுபதி, பிஸியான நடிகராக இருக்கிறார். நான் ஒரு படம் முடித்தவுடன்தான் அடுத்த படம் என்று திட்டமிட்டு நடித்து வருகிறேன்.
இதனால் விஜய் சேதுபதியுடன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முதலில் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை ஷூட் பண்ணலாம். ஒரே கட்டமாக அவருடைய காட்சிகளை முடித்துவிட்டு, எடிட்டிங் முடிந்தால் என்னவெல்லாம் மீதமுள்ளதோ அதெல்லாம் கடைசியாக எடுத்துக் கொள்ளலாம்’’ என விஜய் கூறியுள்ளார்.
விஜய்யின் இந்த வேண்டுகோள் குறித்து படக்குழுவினர் விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளனர். அவரோ மிகவும் நெகிழ்ந்து போய்விட்டாராம். நம் மீது இவ்வளவு மரியாதை வைத்துள்ளாரே என்று விஜய்க்கு நன்றி கூறியுள்ளார். இனி நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய் – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க படக்குழு தயாராகி வருகிறதாம்.
