Connect with us

Cinemapettai

தளபதி64 அப்டேட்.. அடிதடியில் இறங்கிய விஜய் சேதுபதி மாளவிகா மோகனன்

vijay-sethupathi-malavika-mohanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி64 அப்டேட்.. அடிதடியில் இறங்கிய விஜய் சேதுபதி மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 64. கைதி என்ற பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நேரடியாக தளபதியை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.

அந்தவகையில் தளபதி 64 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

thalapathy-64-announcement

thalapathy-64-announcement

மேலும் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தளபதி 64 படத்தில் நாயகியாக நடிக்கும் மாளவிகா மோகனன் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அவரை எதிர்த்து சண்டை போடும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்ட தாம்.

ஏற்கனவே சமீபத்தில்தான் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளும் சண்டை காட்சி கர்நாடகாவில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளதால் படம் பக்கா கேங்ஸ்டர் தரத்தில் உருவாகி வருவது தெரிகிறது.

விரைவில் படப்பிடிப்பு முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top