Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர்தான் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இயக்குனர் அட்லீயின் அடுத்த படம்தான் தளபதியின் 63வது படம். அட்லியின் திரைப்பட கதைகள் பழைய ஹிட்டான படங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் பொருந்தும் வண்ணமாக இருக்கும் என்பதால் திரைப்படத்துறையினர் இதனை எச்சரித்துள்ளனர். தளபதியை வைத்து அட்லி மற்றும் மெர்சல் படத்தை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

nayanthara-thalapathy63
இப்போது தளபதி 63 படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா இப்போது உள்ள முன்னணி நடிகையின் டாப் ரேங்கில் உள்ளார் அவர் நடித்து வெளிவந்த அறம் திரைப்படம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பாதையில் போய்க் கொண்டிருக்கும் நயன்தாராவின் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தளபதி-63. அவர் சமீபத்தில் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அவரின் முழு முயற்சிகளை கிடைத்த வெற்றி என்றே கூறலாம். நயன்தாரா விஜயுடன் இணையும் இரண்டாவது படம் இதுவே முதல் படம் வில்லு.
