Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி62 படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இதோ.!

இரண்டு பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனரான முருகதாசுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் தளபதி 62 படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது என அறிவித்தார்கள்.
தளபதி விஜய் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்பொழுது வரும் என பல ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார்கள் படக்குழு, மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார்.
நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி நடித்து வருகிறார், படத்திற்கு மீண்டும் ரகுமான் இசையமைத்து வருகிறார், இவர் விஜய்க்கு மெர்சல் படத்தில் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது படத்தின் டைட்டில் “சர்க்கார்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
