பரதன் இயக்கத்தில் விஜய்யின் 60வது படத்தின் வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது இந்த படத்தை பற்றிய ஹாட் டாபிக் என்றால் அது படத்தின் பெயர் தான்.

ஒவ்வொரு நாளும் படத்துக்கு இதுதான் பெயர் என பலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர். அதேபோல் தற்போது படத்திற்கு பெயர் ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் என நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஒரு வார்த்தையில் வந்த விஜய்யின் ஜில்லா, துப்பாக்கி, கத்தி, தெறி போன்ற படங்கள் ஹிட் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.