இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பில் விஜய்-கீர்த்திசுரேஷ் பாடல் காட்சிகள், மற்றும் ஆக்சன் காட்சிகள் படமாக்க இயக்குனர் பரதன் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தெறி 200 கோடி வசூல் உண்மையா? வெளிவந்த உண்மை

வரும் செப்டம்பர் மாதம் ஆயுத பூஜை திருநாளில் ‘விஜய் 60’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் மற்றும் நவம்பரில் இந்த படத்தின் பாடல்கள் ஆகியவற்றை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  வட்டிக்காரர்களை ஒழிக்க விஷாலின் புது கணக்கு.! அஜித், விஜய் ஓகே சொல்வார்களா?

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.