இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றது.

சமீபத்தில் இப்படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்பட்டது, இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஆனால், இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும் அதிகாரப்பூர்வமாக படக்குழுவே அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.