தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 8-ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.