விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை தொடர்ந்து விரைவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இப்படம் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை பாணியில் உருவாகி வருகிறது. எனவே தற்போது இப்படத்துக்கு அதே பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.