Connect with us

Cinemapettai

seeman

Politics | அரசியல்

தளபதி விஜய்க்கு கிரீன் சிக்னல்.. ரஜினிக்கு ரெட் சிக்னல்? சீமான் அதிரடி பேச்சு சர்ச்சை

“தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஏற்கிறோம்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தால் அதை ஏற்க மாட்டோம்”என விஜய்,ரஜினி ஆகியோரின் அரசியல் வருகை குறித்து சீமான் அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளின் போது அறிவித்தார்.கூடவே 234 தொகுதிகளிலும் சுயேட்சையாக நிற்பது என்றும் கூறியிருந்தார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியாக வரவேற்று இருந்தனர்.

அதேபோல் தளபதி விஜய்யின் சமீபத்திய படங்களில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தைரியமாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.இதனால் அவருக்கும் அரசியல் ஆசை உண்டு என அவரது ரசிகர்களும் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இருவரின் அரசியல் நிலையை குறித்து சீமானிடம் கேட்டபோது,”தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நான் வரவேற்பேன். ஏனென்றால் அவர் நமது தமிழ் ரத்தம்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் அண்ணிய மாநிலத்தவர்”என தைரியமாக தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இதனால் விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடியும், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை வசைபாடும் வருகின்றன.

குருநாதா.?..? கருத்துரிமை எங்கே?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top