ரசிகரின் செருப்பை எடுத்துக்கொடுத்த விஜய்.. மனதை நெகிழ வைக்கும் வீடியோ

எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்த செய்தி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது. தன்னுடைய கடைசி வீடியோவில் கூட கொரானாவில் இருந்து தப்பித்து விடுவேன் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

பல ஆயிரம் பாடல்களை பாடிய SPB, சில படங்களிலும் நடித்துள்ளார். அவையும் இவர் பாடல்கள் போலவே ஹிட் தான். அவர் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் தளபதி விஜய்யுடன் நடித்த பிரியமானவளே. இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இன்று பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கிற்கு விஜய் வந்திருந்தார். தனது மரியாதையை செலுத்தினார். அப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது விஜய்யின் ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காவல் துறை விளக்கி விட்டனர். அப்போது கூட்டத்தில் விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டார். அதை எடுத்துக்கொடுத்துள்ளார் தளபதி விஜய். அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

சில காலமாகவே தனது சிம்ப்ளிசிட்டி வாயிலாக பலரையும் கவர்ந்து வருகிறார் தளபதி விஜய்.

இதோ அந்த வீடியோ லிங்க் …