Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி64 படத்திற்கான டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. டென்ஷனில் படக்குழு
பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடந்து முடிந்தது.
தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக கர்நாடகாவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் கூடிய விரைவில் விஜய் சேதுபதி, பட குழுவினருடன் இணைய உள்ளார். அவரைத் தொடர்ந்து மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், பிரகிதா, ஆண்ட்ரியா என பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை நீட் தேர்வினால் இறந்த அனிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தியும், அதற்கு நீதி வழங்கும் வகையில் எடுக்கப்படுவதாக வதந்திகள் கிளம்பியது. அதற்காக படத்திற்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தளபதி படத்தின் தலைப்பை சிவா வைத்துக் கொண்டதாகத் பலர் தெரிவிக்கின்றன.
மேலும் தளபதி ரசிகர்களுக்கு டாக்டர் தலைப்பில் பெரிய உடன்பாடு இல்லை என்பதும் உண்மைதான்.
